'மக்கள்சேவகர்' கருணாநிதி உடல் நலம் விசாரித்த குடியரசு தலைவர்

  Newstm Desk   | Last Modified : 27 Jul, 2018 01:06 pm
president-ramnad-kovind-inquired-about-karunanidhi-s-health

கருணாநிதியின் உடல் நலம் குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விசாரித்துள்ளனர். 

50 ஆண்டுகளாக திமுக தலைவராக இருந்து வரும் கருணாநிதி, தற்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவக் குழு கோபாலபுர இல்லத்தில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அவருக்கான மருந்துகள் காவேரி மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. கருணாநிதியை பார்த்து நலம் விசாரிக்க தொண்டர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்பட பல பிரபலங்கள், கோபாலபுர இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். 

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "கருணாநிதியின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரை தொலைபேசி மூலம் அழைத்து விசாரித்தேன். முன்னாள் முதலமைச்சர், மக்கள்சேவகரான கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க. ஸ்டாலினிடம் விசாரித்தேன். தலைசிறந்த தலைவரான கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close