தாஜ்மஹால் பராமரிப்பு வழக்கு: மீண்டும் மத்திய அரசை சாடிய உச்சநீதிமன்றம்

  Newstm News Desk   | Last Modified : 27 Jul, 2018 10:20 pm

supreme-court-warns-center-again-regarding-taj-mahal-s-future

தாஜ்மஹாலை பராமரிப்பது தொடர்பான வழக்கில் மத்திய மற்றும் உத்திரபிரதேச அரசை உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டித்துள்ளது. 

தாஜ்மஹாலை பராமரிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மதன் பி லோகர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, "உலக பாரம்பரிய சின்னமான தாஜ்மஹாலை காக்க இந்திய தொல்லியல் துறையிடம் எந்த திட்டமும் இல்லையா?...  இது ஆச்சரியமாக உள்ளது" என்று நீதிபதிகள் கூறினர். ஒருவேளை உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டுவிட்டால் என செய்வீர்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நிச்சயம் அது ஏமாற்றம் அளிக்க கூடியதாக இருக்கும் என்று கூறினார். இவ்விவகாரத்தில் சுற்று சூழல் துறை அமைச்சகம் தொல்லியல் துறை உத்திரபிரதேச அரசு தனித்தனியாக அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

மேலும் நீதிபதி குப்தா பேசும் போது, "உங்களிடம் எந்தெந்த நகரங்கள் வேகமாக மாசடைந்து வருகிறது என்பதன் உள்ளதா?, மாசடைவதற்கு காரணம் என்ன என்று தெரியுமா, இதுகுறித்து எத்தனை புகார்கள் வந்திருக்கின்றன என்பது தெரியுமா" என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். 

Advertisement:
[X] Close