பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப்...பெண்ணுக்கு குவிந்த திருமண வரன்கள்!

  Newstm Desk   | Last Modified : 28 Jul, 2018 08:29 am
pm-narendra-modi-s-autograph-gets-bengal-girl-marriage-proposal

பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் வாங்கியதால் இளம்பெண் ஒருவருக்கு திருமண வரன்கள் குவிந்து வருகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 16ம் தேதி நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.  அவர் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் தீடீரென அங்கிருந்த கூடாரம் சரிந்து விழுந்தது. அப்பகுதியில் கூடியிருந்தவர்கள்  மீது கூடாரம் விழுந்ததால் அவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார். அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர் பிரதமரிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். அவரும் உடனே போட்டுக்கொடுத்தார். 

இந்நிலையில் தற்போது அந்த பெண்ணின் தாயார் கூறுகையில், "பிரதமர் மோடி ஆட்டோகிராப் போட்டதையடுத்து, இதுவரை எங்களை கண்டுகொள்ளாத பலர் இப்போது எங்களை விசாரிக்கின்றனர். எனது மகளுக்கு கடந்த 10 நாட்களில் மட்டும் 2 வரன்கள் வந்தன. ஆனால் அவர் படித்துக்கொண்டிருப்பதால் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று நிறுத்தி வைத்துள்ளோம்" என்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close