உ.பி.யில் தொடரும் கனமழை: 30 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 28 Jul, 2018 10:52 am

30-dead-due-to-heavy-rain-in-up

உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழையில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதையடுத்து, மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளக் காடானது. வீடுகள் நூற்றுக்கணக்கில் நீரில் மூழ்கின. மரங்கள் சாய்ந்தன. பல்வேறு இடங்களில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  தொடர் கனமழை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.