இயக்குநருக்கு 'நோட்டீஸ்' அனுப்பிய பயங்கரவாதி!

  Newstm Desk   | Last Modified : 28 Jul, 2018 03:57 pm

the-team-of-sanju-receive-a-legal-notice-from-gangster-abu-saleem

சஞ்ஜு திரைப்படத்தில் தன்னை பற்றிய தவறான தகவல்கள் இடம்பெற செய்ததாக குற்றம்சாட்டி படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானிக்கு பயங்கரவாதி அபு சலிம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார். 

சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து, பாலிவுட்டில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் சஞ்ஜு என்ற பெயரில் திரைப்படம் எடுத்தார்.  ரன்பீர் கபூர் நடித்த இந்த படத்தை வினோத் சோப்ரா பிலிம்ஸ் தயாரித்தது. இந்த நிலையில் சஞ்சய் தத் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்ற பெயரில், தன்னை பற்றி அவதுாறு தகவல்கள் படத்தில் இடம் பெற்றுள்ளதாக பயங்கரவாதி அபு சலீம் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தன்னை பற்றிய அவதுாறு காட்சிகளை 15 நாட்களுக்குள் படத்திலிருந்து நீக்கும் படி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு அபு சலீம் நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதோடு படக் குழு மன்னிப்பு கேட்கவும் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

மும்பையில், 1993ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 257 பேர் பலியாகினர். சுமார் 700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி அபு சலீம் சிறையில் உள்ளார். இந்த சம்பவத்தின் போது ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு (58) 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close