கருணாநிதி ஒரு பிறவி போராளி: கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்

  Newstm Desk   | Last Modified : 28 Jul, 2018 01:48 pm

kerala-cm-pinarayi-vijayan-tweet-about-karunanidhi

தி.மு.க தலைவர் கருணாநிதி ஒரு பிறவி போராளி, அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர். இருந்தும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். ஏராளமான தொண்டர்களும்  மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். மருத்துவமனை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

'கருணாநிதி விரைவில் குணமடைவார்' என சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பல்வேறு மாநிலத் தலைவர்கள் பதிவிட்டு வருகின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தி.மு.க தலைவர் கருணாநிதி ஒரு பிறவி போராளி. அவர் விரைவில் குணமடைந்து திரும்புவார். அதற்காக நான் இறைவனை வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close