பாவமன்னிப்பு முறை ரத்துக்கு எதிர்ப்பு: பிரதமரை நாடும் பேராயர் சங்கம் 

  Newstm Desk   | Last Modified : 28 Jul, 2018 03:58 pm

church-body-complains-to-pm-about-women-panel-proposal

தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்கும் முறையையே கைவிட வேண்டும் என்ற தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கேரள கத்தோலிக்க பேராயர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

தேவாலய குழுக்கள் மீதான குற்றச்சாட்டுகளை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும், பாவமன்னிப்பு கேட்கும் முறையையே கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை உள்துறை அமைக்கத்துக்கு தேசிய மகளிர் ஆணையம் சமீபத்தில் அனுப்பியது. 

இந்த நிலையில், கேரளாவில் நடைபெற்ற கத்தோலிக்க பேராயர்கள் கூட்டத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், பிரதமருக்கு பேராயர்கள் கூட்டமைப்பு இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. அதில், தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையை நிராகரிக்க வேண்டும். தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்கும் முறை காலம் காலமாக இருந்து வருவதால் அதை நீக்கக் கூடாது. சிறுபான்மையின மக்களின் மத நம்பிக்கையில் ஆணையங்கள் தலையிட அனுமதிக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். 

சமீபத்தில் கேரளாவில், பாவமன்னிப்பு கேட்க வந்த பெண் ஒருவரிடம் 4 பாதிரியார்கள் பாலியல் வல்லுறவில்  ஈடுபட்டதாக புகார் எழுந்தது. மேலும் கேரளாவில் மற்றொரு சம்பவத்தில், கோட்டயம் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பேராயர் ஒருவர் பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close