இந்திய செயற்கைக் கோளிலிருந்து தப்பிக்க சீனா முயற்சி

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 07:12 am
china-tries-to-escape-from-indian-satellites

டோக்லாம் பகுதியில் மிகப்பெரிய ராணுவ குடியிருப்பை உருவாக்கும் சீனா இந்திய செயற்கைக்கோள்களில் இருந்து தப்பிக்க கொட்டகை அமைத்துள்ளது.

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் சந்திப்பில் உள்ள பகுதி தான் டோக்லாம். இங்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. ஆனால் இதை இந்திய ராணுவம் தடுத்து விட்டது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும் இங்கு படைகளை குவித்தன.

இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வைத்த நிலையில் இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவியது. இதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தூதரக ரீதியாக சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

டோக்லாமில் இரு நாடுகளும் படைகளை விரைவில் வாபஸ் பெறுவதென ஒப்புக் கொண்ட நிலையில், டோக்லாம் பகுதியில் சீனா தனது நடவடிக்கைகளை தொடர்ந்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு சாலை மட்டுமின்றி டோக்லாம் அருகே மிகப்பெரிய ராணுவ குடியிருப்பு ஒன்றையும் சீனா கட்டுவதாக கடந்த ஜனவரி மாதம் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதன் மூலம் டோக்லாம் தொடர்பாக மற்றொரு மோதலுக்கு சீனா தயாராகி வருவதாகவும் அந்த செய்திகள் கூறியிருந்தன.

சமீபத்தில் இந்த பணியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்காக 90 கூடாரங்களும், 5 தற்காலிக கொட்டகைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்திய செயற்கைக்கோள்களின் பார்வையில் இருந்து கட்டுமான பணிகளை மறைப்பதற்காக  கொட்டகைகள் அமைக்கப்பட்டடு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close