பாஜகவுடன் கூட்டணி வைப்பது ஒரு கப் விஷம் குடிப்பதற்கு சமம்- மெஹபூபா முப்தி

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Jul, 2018 07:16 am
a-cup-of-poison-mehbooba-mufti-describes-her-party-s-alliance-with-bjp

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பது ஒரு கோப்பை விஷம் அருந்துவதற்கு சமமானது என ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்தி விமர்சித்துள்ளார். 

ஜம்மு- காஷ்மீரில், கடந்த மாதம் 19-ம் தேதியன்று மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகப் பா.ஜ.க அறிவித்தது. இதனால், மெஹபூபா முஃப்தி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து மெஹபூபா பதவி விலகினார். ஜம்மு காஷ்மீரில் தற்போது ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது. 

இந்நிலையில் மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவன நாள் தின கொண்டாட்டத்தையொட்டி நடந்த நிகழச்சியில் பேசிய மெஹபூபா, “காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதையடுத்து பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி முன் வந்தது. ஆனால் அந்த அனுபவமும் மிகவும் மோசமான அனுபவத்தையே கொடுத்தது. மாநிலத்தின் நலனுக்காக பாஜக எந்த ஒரு திட்டத்தையும் செய்ய அனுமதிக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது ஒரு கோப்பை விஷத்தை அருந்தி இருப்பது போன்று இருந்தது” என கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close