யோகிடம் ஆசிப்பெற்ற காவலர்- வைரலாகும் புகைப்படங்கள்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Jul, 2018 12:06 am

up-cop-in-uniform-kneels-down-before-cm-yogi-adityanath-to-seek-blessings-photos-go-viral

உத்தரப்பிரதேசத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் சீருடை அணிந்தபடி மண்டியிட்டு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஆசி பெறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் பணிபுரியும் ஒரு காவல் அதிகாரி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஆசிவாதம் பெற்று புகைப்படங்களுக்கு கீழே நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன் என்ற வசனத்துடன் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

கோரக்பூரில் உள்ள கோரக்நாத் என்ற பகுதியில் சர்க்கிள் ஆபீஸராகப் பணிபுரிபவர், பிரவீன் குமார் சிங். இவர் குரு பூர்ணிமாவையொட்டி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார். இதையடுத்து அங்கு வந்திருந்த முதலமைச்சர் யோகியிடன் மண்டியிட்டு, அவருக்கு மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு அடிபணிந்து அவரிடம் ஆசிப்பெற்றுள்ளார். 

இதுகுறித்து காவல் அதிகாரி பிரவீன் குமார் சிங் கூறுகையில், ‘நான் இந்த கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்தேன். அப்போது முதலமைச்சரிடம் அனைவரும் ஆசிர்வாதம் பெற்றனர். இதைப்பார்த்து அவரிடம் ஆசி பெற ஓடிவந்த நான் எனது பெல்ட், தொப்பு உள்ளிட்டவற்றை கழட்டிவிட்டு மரியாதையுடன் ஆசிர்வாதன் வாங்கினேன்’ என கூறினார்.
          

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close