நான் ஏழைகளின் கூட்டாளி: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் பதில்

  Newstm Desk   | Last Modified : 29 Jul, 2018 08:38 am

proud-to-be-an-friend-of-citizens-modi

மோடி பெரிய முதலாளிகளின் கூட்டாளி என்று கூறிய ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார். 

மத்திய அரசின் நலத் திட்டங்களின் 3ம் ஆண்டு நிறைவு விழா உத்தரப்பிரதேசத்தில் லக்னோவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் கலந்துகொண்டர். 

இதில் பிரதமர் மோடி பேசும் போது, "எப்போது நான் இந்த நாட்டின் காவலாளி என்றே கூறுவேன். ஆனால் என்னை கூட்டாளி என்று கூறுகிறார்கள். அந்த பெயரை எனக்கு கொடுக்கப்பட்ட பரிசாக, கவுரவமாகவே கருதுகிறேன். நான் கூட்டாளி தான். வறுமையில் வாடும் ஏழைகளுக்கு நான் கூட்டாளிதான். கடினமாக உழைக்கும்  தொழிலாளர் வர்க்கத்திற்கு நான் கூட்டாளிதான். துயரத்துடன் வாழும் தாய்மார்களுக்கு கூட்டாளி நான். இயற்கை பேரிடர்களால் பயிர்களை இழந்து  தவிக்கும் ஏழை விவசாயிகளுக்கு கூட்டாளி நான். மருத்துவ சிகிச்சைக்காக நிலத்தை விற்கும் ஏழைகளுக்கும், வீடு இல்லாதவர்களுக்கும், படிக்க  முடியாத குழந்தைகளுக்கும்,  வேலையில்லாத இளைஞர்களுக்கும் நான் கூட்டாளிதான்.

2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு  வழங்குவதை உறுதி செய்வதை நோக்கி இந்த அரசு உழைத்துக் கொண்டிருக்கிறது. இதுவரை நகர்ப்புறங்களில் 54 லட்சம் வீடுகளுக்கும், கிராமப்புறங்களில் 1 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் அனுமதி  வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை எளிமையான, வசதியான என்ற நிலையில் இருந்து வலிமையானதாக மாற்றுவோம் என்ற  வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு முன்பு முதல்வராக இருந்தவர்கள் ஒன்றை மட்டுமே  குறியாக கொண்டு இருந்தார்கள். அவர்களின் பங்களாக்களை எப்படி பொலிவாக்குவது என்பதே அது. அதிகாரத்தில் இருந்தவர்களின் ஒரே இலக்காக  அது இருந்தது. அந்த நிலை தற்போது மாறியிருக்கிறது" என்றார். 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close