கங்கை நீரால் கேடு! - எச்சரிக்கை பலகை வைக்க உத்தரவு

  Padmapriya   | Last Modified : 29 Jul, 2018 05:54 pm
ganga-water-is-injurious-to-health-ngt-says-holy-river-should-carry-warning-like-cigarettes

குடிப்பதற்கோ அல்லது குளிப்பதற்கோ தகுதையர்ரதாய் இருக்கும் கங்கை கரைகளில் எச்சரிக்கை வாசக பலகைகள் வைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் ஹரித்துவார், உன்னாவோ பகுதிகளுக்கு இடையே ஓடும் கங்கை நீர் மிகவும் மாசுபாடாக உள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் முன்னதாக தெரிவித்திருந்தது. மேலும், அந்த நீர் குடிப்பதற்கோ அல்லது குளிப்பதற்கோ தகுதியற்றதாகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தது. 

இந்த நிலையில் சிகரெட் அட்டைகள், மதுப்பான பாட்டில்கள் மேல் "உடல் நலத்திற்கு தீங்கு" என வாசகங்கள் எழுதப்பட்டிருப்பது போல, ஏன் கங்கை நீர் மாசுபட்டுள்ள பகுதியில் எச்சரிக்கை வாசகம் வைக்ககூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. கங்கை புனிதம் என்று, நீரில் இருக்கும் மாசுவினை பொருட்படுத்தாமல் மக்கள் பயன்படுத்துவது அவர்களின் உடல் நலத்திற்கு கேடு விலைவிக்கும். இதனை மக்கள் உணராமல் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் அது குறித்து அறிவுறுத்த வேண்டியது நமது கடமை என்று நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. 

மேலும், கங்கை நீர் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் தகுதியுடையதா என்பதை தெரிவிக்கும் வகையில், 100 கி.மீ இடைவெளியில், கங்கை நீரின் தரத்தினை குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்குமாறு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கங்கையில் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் ஏற்ற பகுதிகள் எவை என்பதை, வரைபடத்தில் குறித்து இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இந்த உத்தரவு தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close