சினை ஆட்டை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரர்கள்

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2018 03:04 am
pregnant-goat-raped-by-8-men

ஹரியானாவில் சினை ஆடு ஒன்றை 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததால் அந்த ஆடு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ஹரியானா மாநிலம், மேவாட் பகுதியில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி இரவு சினை ஆடு ஒன்றை 8 ஆண்கள் மது அருந்தி விட்டு கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் அந்த ஆடு பரிதாபமாக உயிரிழக்க நேர்ந்தது.

மேவாட் பகுதியைச் சேர்ந்த அஸ்லு, கடந்த ஜூலை 26 ஆம் தேதி மேவாட்டில் உள்ள நகினா காவல் நிலையத்தில் தனது ஆட்டை, அதே பகுதியைச் சேர்ந்த சாவகர், ஹரூன் ஜாஃபர் உள்ளிட்ட 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். ஆட்டின் உரிமையாளர் அஸ்லு அளித்த புகாரின் பேரில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து நாகினா காவல் நிலைய போலீஸ் ராஜ்பிர் சிங் , "புகாரின் அடிப்படையில் எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னும் 5 பேர் அடையாளம் காணப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர்" என்று தெரிவித்தார். இந்த சம்பவம் ஹரியானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close