மொபைல்போன் உற்பத்தி மையம் இந்தியா- பிரதமர் மோடி

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Jul, 2018 05:21 pm

india-is-being-recognised-as-mobile-manufacturing-hub-pm-modi

உலகின் மொபைல்போன் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது என மோடி தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் புதிய முதலீடு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உத்தரப்பிரதேசத்தில் 50க்கும் அதிகமான மொபைல்போன் உற்பத்தி ஆலைகள் இயங்குகின்றன. உலகின் மொபைல்போன் உற்பத்தி மையமாக இந்தியா திகழ்கிறது. செல்போன் தயாரிப்பதில் இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி 2019 மார்ச் மாதத்துக்குள் மாநிலத்தின் அனைத்து வீடுகளுக்கும் மின்வசதி அளிக்கப்படும். உஜாலா திட்டத்தில் வீடுகளுக்கு எல்இடி மின் விளக்குகளை வழங்கியதால் மின்கட்டணம் சேமிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 50, 000 கோடி மதிப்பு மின் கட்டணம் சேமிக்கப்பட்டுள்ளது” என கூறினார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close