• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

இன்றும் நாளையும் வானம் சிவப்பாக இருக்கும்.. பயப்படாதீங்க!! 

  சுஜாதா   | Last Modified : 30 Jul, 2018 10:53 am

mars-comes-closest-to-earth-in-over-decade-on-july-30-31

செவ்வாய் கிரகம், பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவதால், இன்றும், நாளையும் வானம் செந்நிறமாக மாறும் அறிய  நிகழ்வைக் காணலாம்.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு, செவ்வாய் கிரகம், பூமிக்கு மிக அருகில் நெருங்கி வருவதால் இன்றும் நாளையும், நீலவானம் செந்நிறமாக மாறும் அற்புத நிகழ்வைக் காணலாம் என ஐதராபாத்தில் உள்ள பிர்லா அறிவியல் மைய இயக்குனர் டாக்டர் பி.ஜி. சித்தார்த் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், செவ்வாயில் மிகப்பெரிய ஏரி இருப்பதற்கான ஆதாரங்களை வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் அங்கு உயிர்கள் 
வாழ்வதற்கான சாத்தியக்கூறு அதிகரித்திருக்கிறது. செவ்வாயின் தென் துருவத்தில் உள்ள பனிப்படலத்துக்குக் கீழே நீர் ஏரி இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இது சுமார் 20 கிலோ மீட்டர் நீளத்துக்கு பரந்து விரிந்திருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எனவே, நமது அடுத்தகட்ட விண்வெளி முகாம்களுக்கும், குடியிருப்புகளுக்கும் செவ்வாய்தான் சிறந்த இடமாக இருக்க முடியும். இதற்கு அங்கு காணப்படும் திரவ நீரும் நமக்கு மிக சிறந்த சாதகமான அம்சமாக அமைந்துள்ளது என ஐதராபாத்தில் உள்ள பிர்லா அறிவியல் மைய இயக்குனர் சித்தார்த் தெரிவித்துள்ளார். 
 

Advertisement:
[X] Close