டிராய் தலைவர் வங்கி கணக்கில் ஒரு ரூபாயை டெபாசிட் செய்த ஹேக்கர்கள்!

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2018 02:21 pm

hacker-deposited-one-rupee-in-trai-chief-r-s-sharma-bank-account

டிராய் தலைவரின் வங்கி கணக்கில் ஹேக்கர்கள் ஒரு ரூபாயை டெபாசிட் செய்த சம்பவம் நடந்துள்ளது. 

தொடக்கம் முதல் ஆதார் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருபவர் டிராய் அமைப்பின் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா. சில தினங்களுக்கு முன்னர் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஆதார் எண்ணை பதிவிட்டிருந்தார். மேலும் அவர், “தமது ஆதார் எண்ணை வைத்து ஏதாவது தீங்கு ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு உதாரணம் செய்து காட்டுங்கள்” என சவால் விடுத்தார். 

இதையடுத்து, ஷர்மா தமது ஆதார் எண்ணை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏலியட் ஆல்டென்சர் என்னும் ஹேக்கர், டிராய் தலைவர் ஷர்மா குறித்த முழு விவரங்களையும் ட்விட்டரில் பதிவிட்டார். இதுதவிர, அவரது வாட்ஸ்ஆப் முகப்பு புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார். 

இந்நிலையில் டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மாவின் வங்கி கணக்கில் ஒரு ரூபாயை டெபாசிட் செய்துள்ளதாக கூறி அதனை புகைப்படம் எடுத்தும் ஹேக்கர்கள் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, ஆதார் எண் மூலம் டிராய் தலைவரின் தகவல்கள் திருடப்பட்டதாக வெளிவந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள ஆதார் முகமை, ஷர்மாவின் தகவல்கள் ஆதாரின் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டதல்ல என தெரிவித்துள்ளது. அவருடைய மொபைல் மற்றும் பேன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தியே தகவல் திருடப்பட்டதாக ஆதார் கூறியது. அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ஆதாரைப் பயன்படுத்தி ஒரு ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close