வீட்டுக்குள் புகுந்து ராணுவ வீரர் சுட்டுக் கொலை: காஷ்மீரில் தொடரும் கொடூரம்

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2018 03:14 pm
terrorists-storm-into-crpf-soldier-s-home-and-kill-him

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில், சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவரை நேற்று தீவிரவாதிகள் வீட்டுக்குள் புகுந்து சுட்டுக் கொன்றனர். 

நசீர் அஹ்மத் ராதர் என்ற துணை ராணுவப்படை வீரர், புல்வாமாவின் நைரா பகுதியில் வசித்து வருகிறார். நேற்று அவர் வீட்டில் இருந்தபோது, திடீரென சில தீவிரவாதிகள் அங்கு புகுந்து அவரை சரமாரியாக சுட்டனர். இதில் அவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, காவல்துறையினர், ராணுவ வீரர்கள், நைரா பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

இந்த மாதம் மட்டும், ஒரு பாதுகாப்பு படை வீரரை குறிவைத்து, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த 21ம் தேதி சலீம் ஷா என்ற ராணுவ வீரரும், ,கடந்த 6ம் தேதி, ஜவைத் தார் என்ற காவல்துறை அதிகாரியும் தீவிரவாதிகளால் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த மாதம், அவுரங்கசீப் என்ற ராணுவ வீரர் புல்வாமா பகுதியில் கடத்தி செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதன் மூலம் காஷ்மீரிகள் இந்திய ராணுவம், காவல் துறை என எந்த ஒரு அரசு துறையிலும் பணியாற்றக் கூடாது என்று ஒருவித பயத்தை ஏற்படுத்த பயங்கரவாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close