'அசாம் குடிமக்கள் பதிவேட்டில் 40 லட்சம் பேர் மாயம்'

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2018 08:49 pm

assam-nrc-final-draft-released-updates-rajya-sabha-adjourned-for-day-amid-opposition-ruckus-over-missing-names

அசாமில் வெளியிடப்பட்ட குடிமக்கள் வரைவு பதிவேடில் 40 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டுள்ள விவகாரம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் இன்று அமளித்துமளியை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலத்தின் அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து அகதிகள் தினம் தினம் இங்கு குடியேருகினறனர். இதனால் அசாமில் பலக்  குழப்பங்கள்  ஏற்பட்டு வருகிறது. இதனால் குடிமக்கள் பதிவேட்டு பணியை மேற்கொள்வதில் அதிகாரிகளுக்கும் சிக்கல் நிலவுகிறது. 

இதற்காக அங்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை மாநில அரசு தயார் செய்து வருகிறது. இதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களைச் சரிபார்த்தல், ஆவணங்களைச் உறுதி செய்தல் என பல முறைகளில் அசாம் மாநில அதிகாரிகள் இந்த பதிவேட்டைத் தயார் செய்தனர். இதன் வரைவு பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்ட போது அதில், ஏராளமானோர் பெயர் விடுபட்டதாக புகார் எழுந்தது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், தலைவர்களின் பெயர்கள் விடுபட்டதாக எதிர்ப்பு எழுந்தது.

இதனிடையே தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவுப்பட்டியல் இன்று வெளியானது. ஆனால் மொத்தம் 3.29 கோடி பேர் வாழும் அம்மாநிலத்தின்  2.89 கோடி மக்களின் பெயர் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 40 லட்சம் பேரின் பெயரகள் இந்த பட்டியலில் விடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. விடுபட்டவர்கள் வங்கதேச குடியேறிகளா அல்லது இந்திய குடிமக்களா என்ற குழப்பமும் உள்ளது. 

இந்தக் குளறுபடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால்  இது வரைவு பட்டியல் மட்டுமே நியாயமான நபர்களின் பெயர்கள் விடுபட்டு இருந்தால், அவர்கள் பெயர் சேர்க்கப்படும் என்று அசாம் அரசு விளக்கம் அளித்துள்ளது.  

இதனிடையே இந்தப் பட்டியலில் வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்களின் பெயர்களை சேர்க்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக அதன் கூட்டணிக் கட்சியான அசாம் கண பரிஷத் தெரிவித்துள்ளது. 

இது குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் பேசும்போது, "தேசிய மக்கள் பதிவேடு பாரபட்சமற்றது. இது ஒரு வரைவு அறிக்கை மட்டுமே இறுதிப்பட்டியல் அல்ல. பெயர் இடம் பெறவில்லையென்று யாரும் அச்சப்பட வேண்டாம். விடுபட்டவர்கள் தாங்கள் இந்திய குடிமக்கள் என்பதை நிரூபிக்க வாய்ப்பு அளிக்கப்படும். 

இந்த பிரச்சினையை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம்.  இந்த விவகாரம் தொடர்பாக யாரும் பீதியடைய வேண்டாம். ஒரு சில பேர் வேண்டும் என்றே அச்ச உணர்வை உருவாக்க திட்டமிடுகின்றனர் " எனக் கூறியுள்ளார். 

Newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close