பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தப்பிய சோக்சியை நாடு கடத்த பேச்சுவார்த்தை

  shriram   | Last Modified : 31 Jul, 2018 09:35 am

india-pressures-antigua-to-get-back-mehul-choksi

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான மெஹுல் சோக்சியை, இந்தியாவுக்கு நாடு கடத்த, ஆன்டிகுவா நாட்டு அரசிடம் இந்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. 

சுமார் 13,500 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த விவகாரத்தில்,  பிரபல வைர தொழிலதிபர் நிரவ் மோடி உட்பட பலரை இந்திய அரசு தேடி வருகிறது. வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்ற அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நிரவ் மோடியின் உறவினரும் முக்கிய குற்றவாளியுமான மெஹுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டிற்கு தப்பிச் சென்றார். 

அவர் அந்நாட்டை விட்டு தப்பி வேறு எங்கும் சென்றுவிடக் கூடாது என்ற காரணத்தால், ஆன்டிகுவா அரசுக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அவரை நாட்டிற்குள்ளேயே வைக்குமாறும், அவர் அங்கு தான் உள்ளார், என உறுதி செய்யவும் இந்திய வெளியுறவுத்துறை ஆன்டிகுவா அரசிடம் கோரியுள்ளது. இந்திய தூதர், ஆன்டிகுவாவின் முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து இந்திய அதிகாரிகள் இந்த விஷயத்தை விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close