ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  Newstm Desk   | Last Modified : 08 Oct, 2018 12:59 pm

aircel-maxis-case-adjourned-until-oct-1

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2006ல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த வழக்கை விசாரித்து வந்த அமலாக்கத்துறை கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. மேலும் அண்மையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், ப.சிதம்பரம் உள்ளிட்ட 17 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் அவகாசம் கோரப்பட்டது.  இதனையடுத்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை மீதான விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close