காங்கிரசுக்கு நன்றி தெரிவித்த மோடி

  Newstm News Desk   | Last Modified : 31 Jul, 2018 08:16 pm

pm-thanks-congress-for-letting-him-expose-the-opposition-s-hollowness

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து எதிர்கட்சிகளின் நிலையை மக்களுக்கு அறிய செய்த காங்கிரசுக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

நடந்து வரும் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான பா.ஜ.கவின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று புது டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அக்கட்சியின் தலைவர் அமித்ஷா மற்றும் பா.ஜ.க அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது ஒரு அரசு பெரும்பான்மையை இழக்கும் போது தான் கொண்டு வர வேண்டும். ஆனால் தற்போது அது போன்ற ஒரு நிலை இல்லை. பா.ஜ.க 326 உறுப்பினர்களின் ஆதரவுடன் பலமாக உள்ளது" என்றார். 

பின்னர் பேசிய பிரதமர் மோடி, "நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்கட்சிகளின் நிலையை மக்கள் அறிய செய்ததற்கு காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தீர்மானத்தில் நாம் அடைந்த வெற்றிக்கு அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறினார். 

ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன.  இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் பெரும்பான்மை ஆதரவு பெற்று ஆளும் பா.ஜ.க அரசு வெற்றி பெற்றது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close