எந்நேரமும் திறந்துவிடப்படலாம்... இடுக்கி அணை எச்சரிக்கை

  shriram   | Last Modified : 31 Jul, 2018 02:42 pm
idukki-dam-to-be-opened-after-26-years

தொடர் மழை காரணமாக கேரளாவின் இடுக்கி அணை நிரம்பி வருவதால், அதை திறந்துவிட அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. 

கேரளாவின் 14 மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக, ஆறுகள் பெருக்கெடுத்தோடி, இடுக்கி அணை நிரம்பி வருகிறது. அணையின் முழு கொள்ளளவான 2404 அடி விரைவில் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2395 அடி அளவுக்கு நேற்று தண்ணீர் நிரம்பியை நிலையில், நேற்று ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 2399 அடியை தண்ணீர் தொடும் போது, சிகப்பு எச்சரிக்கை  விடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

இதனால், எந்நேரமும் தண்ணீர் திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம், த்ரிசூர் இடுக்கி பகுதிகளுக்கு மீட்புப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஆற்றுப் படுகையில் வசித்து வரும் மக்களுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டு அவர்களை, ஆபத்தான இடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணிகளை நடத்தவும் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் இடுக்கி அணை கடந்த 1992ம்  ஆண்டு திறந்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close