ஆதார் எண்ணை சமூக வலைதளங்களில் பதிவிடாதீர்கள்: ஆணையம் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 09:48 am

dont-share-aadhaar-number-in-public-uidai

பொது மக்கள் யாரும் ஆதார் எண்ணை சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்று ஆதார் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா, தனது ஆதார் எண்ணை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அதன்மூலம் தனக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமா என சவால் விடுத்தார். இதையடுத்து அவரது பல்வேறு தகவல்களை ஹேக்கர்கள் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டது. இந்நிலையில் ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையதளம் உள்ளிட்ட பொதுவெளிகளில் ஆதார் எண்களை பொதுமக்கள் வெளியிட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவெளியில் வெளியிடுவது சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்துள்ள ஆதார் ஆணையம், அரசின் சேவைகளையும், பலன்களையும் பெறுவதற்காக மட்டுமே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

வங்கிக்கணக்கு, பாஸ்போர்ட், பான் கார்டை போன்றே ஆதார் எண்ணும் ஒருவரின் தனிப்பட்ட விவகாரமாகும். அதனை பகிர்வது ஆதார் ஆணைய சட்டம் 2016ன் படி தடை செய்யப்பட்டுள்ளது.  அவ்வாறு பகிர்வது தனிப்பட்ட நபரை பாதிக்கும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மற்றவர்களின் ஆதார் எண்ணை தங்களது அடையாளத்துக்காக பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் என்றும் ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close