• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

விமானத்தில் மூச்சுத் திணறல்; பச்சிளம் குழந்தை பலி

  shriram   | Last Modified : 01 Aug, 2018 11:52 am

4-month-old-child-dies-mid-air-after-breathing-problem

பெங்களூரில் இருந்து பாட்னா சென்று கொண்டிருந்த விமானத்தில் 4 மாத குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பெங்களூரை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது 4 மாத குழந்தையுடன் பாட்னா சென்று கொண்டிருந்தனர். இண்டிகோ விமானத்தில் அவர்கள் பயணித்துக் கொண்டிருந்த போது, நடுவானில் அவர்களது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது விமானத்தில் ஒரு டாக்டர் இருந்ததாக தெரிகிறது. அவர், குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்து வந்த போது, விமானம் அவசரமாக ஹைதராபாத்தில் தரையிறக்கப்பட்டது. விமான ஊழியரின் உதவியுடன் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக, விமான நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. 

newstm.in

Advertisement:
[X] Close