சுதந்திர தின உரையில் என்ன பேசலாம்? - நாட்டு மக்களிடம் ஆலோசனை கேட்கும் பிரதமர் மோடி!

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 12:26 pm

pm-modi-seeks-ideas-for-his-independence-day-speech

இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் என்ன பேசலாம் என பிரதமர் மோடி பொதுமக்களிடம் ஆலோசனை கேட்டுள்ளார். 

வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 72வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி, சுதந்திர தின உரையில் நாட்டின் எந்த பிரச்னைகள் குறித்து பேசலாம் என பிரதமர் மோடி மக்களிடம் கருத்து கேட்டுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "வருகிற சுதந்திர தின நிகழ்ச்சியில் என்ன பேசலாம் என பொதுமக்கள் 'நமோ'(NAMO) மொபைல் செயலி மூலமாகவோ www.mygov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ  கருத்துக்களை நேரடியாக தெரிவிக்கலாம். இதன்மூலம் மக்களின் எண்ணங்களை நாங்கள் தெரிந்துகொள்ள முடியும். உங்களது கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

மக்களிடம் கருத்துகளை கேட்கவும், அவர்களோடு உரையாடவும் நமோ மொபைல் செயலியை பிரதமர் மோடி கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கடந்த 3 வருடங்களாக மக்களிடம் கருத்து கேட்டு சுதந்திர தினத்தில் உரையாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். வரும் ஆண்டு 5வது முறையாக  சுதந்திர தினத்தில் அவர் உரையாற்ற இருக்கிறார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் அவர் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாகவே பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close