அமெரிக்காவில் பாஸ்போர்ட் தொலைத்த புதுமாப்பிள்ளை... ட்விட்டரிலேயே உதவிய சுஷ்மா!

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 04:28 pm
sushma-swaraj-assures-help-to-man-who-lost-passport-days-before-his-wedding

பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் தொலைத்து தனது திருமணத்துக்கு சரியான நேரத்தில் வர முடியுமா என தவித்துக் கொண்டிருந்த புதுமாப்பிள்ளைக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவிக் கரம் நீட்டியுள்ளார். 

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாகவும் எந்த நிலையிலும் அணுகக் கூடிய வகையில் காணப்படுவார்.  இதன் மூலம், இந்தியாவின் உதவியை நாடும் அயல் நாட்டவர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் அவர்களது பிரச்னைக்கு நேரடியாக சுஷ்மாவை தொடர்புகொண்டு தீர்வு கண்டுள்ளனர். 

இந்தியாவைச் சேர்ந்த தேவதா ரவி தேஜா என்பவர் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வரும்  13 ஆம் தேதி இந்தியாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேவதா ரவி தேஜா தன்னுடைய பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் தொலைத்துவிட்டார். 

இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு அவர் ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ''என்னுடைய திருமணம் ஆகஸ்ட் 13ம் தேதி நடக்க உள்ளது. ஆனால் தற்போது நான் பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டேன். ஆகஸ்ட் 10ம் தேதி நான் இந்தியாவுக்குப் பயணம் செய்ய வேண்டும். தயவுசெய்து, நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். நான் இப்போது உங்களை மட்டும்தான் நம்பியுள்ளேன்''  என்று கோரிக்கை வைத்துள்ளார். 

இதையடுத்து, சுஷ்மா ஸ்வராஜ் ''உங்கள் பாஸ்போர்ட்டை தவறான நேரத்தில் தொலைத்து விட்டீர்கள். திருமண நேரத்துக்குச் செல்ல கண்டிப்பாக உங்களுக்கு உதவுகிறேன்'' என உடனடியாக பதிலளித்தார். இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி நவ்தேஜ் சர்னாவிடம் பேசிய சுஷ்மா, பாஸ்போர்ட்டை தொலைத்த தேவதா ரவி தேஜாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் படி கேட்டுக் கொண்டார் 

இதற்காக சுஷ்மா ஸ்வராஜுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார் தேவதா ரவி தேஜா. தக்க நேரத்தில் உதவிய சுஷ்மா ஸ்வராஜுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close