உள்நாட்டு போர் வெடிக்கும் என்ற மம்தா மீது வழக்கு: அசாமில் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 04:29 pm
police-case-filed-against-mamata-banerjee-for-civil-war-comment-on-nrc

அசாமை போல மேற்கு வங்கத்திலும், குடிமக்கள் பதிவேடு அறிக்கையை செயல்படுத்தினால் உள்நாட்டுப் போர் வெடிக்கும் என கூறிய மேற்குவங்க முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது தேசிய குடிமக்கள் பதிவேட்டில், மாநிலத்தில் உள்ள 40 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மம்தா பானர்ஜி நேற்று சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, "தேசிய குடிமக்கள் பதிவேடு மசோதாவில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிய மசோதாவை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேற்குவங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு அறிக்கையை செயல்படுத்தினால், உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்ததாக அவர் கூறினார். எனினும், மக்களை மத்திய அரசு அச்சுறுத்தாது என்று ராஜ்நாத் சிங் உறுதியளித்ததாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

இதனிடையே, உள்நாட்டுப் போர் வெடிக்கும் என்று கூறியதற்காக மம்தாவுக்கு எதிராக அசாம் மாநிலத்தின் திப்ரூகர் மாவட்டத்தில் பா.ஜ.க இளைஞர் அணி பிரிவினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதனடிப்படையில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக மம்தா பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close