ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்ய செப். 28 வரை தடைநீட்டிப்பு!

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 05:19 pm
inx-media-case-delhi-hc-extends-protection-from-arrest-given-to-chidambaram-till-sep-28

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை செப்டம்பர் 28ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார். தொடர்ந்து சிதம்பரத்தை விசாரணை செய்ய சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவில் முதற்கட்டமாக  மே 31ம் தேதி வரை  ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஆகஸ்ட்  1 வரை தடை நீடிக்கப்பட்ட நிலையில், தற்போது செப்டம்பர் 28ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close