ஊதா நிறத்தில் மூணார் : மிஸ் பண்ணிடாதிங்க

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2018 05:14 am

purple-blossoms-in-moonar

 தமிழகத்தின் தேனி மாவட்டத்தை ஒட்டி, கேரள  மலைபகுதி மூணாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் பூத்துக்குழுங்கி வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

‘தென்னகத்து காஷ்மீர்’ என அழைக்கப்படும் தேயிலை தோட்டங்களால் சூழப்பட்டுள்ள மூணாரில் வருடந்தோரும் இதமான குளிர்  நிலை நிலவுவதால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகை தரும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி எனப்படும் நீலக்குறிஞ்சி மலர்கள் மூணார் மலைப் பகுதியில் பூக்கத் தொடங்கியுள்ளன. மூணாரில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா பகுதியில் பூத்திருக்கும் குறிஞ்சி மலர்கள் கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

 

— Satya Kushwaha (@stockmitra) July 31, 2018

 


பச்சை நிறத்தில் பசுமையாக காட்சியளித்து வந்த மூணார் தற்போது குறிஞ்சி மலர்களால் ஊதா வண்ண நிறத்தில் காட்சியளிக்கிறது. முன்னதாக 2006ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் குறிஞ்சி மலர்கள் பூத்துக்குழுங்கிய நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் இந்தப் பூக்கள் பூத்துள்ளன.

இந்த அரிய காட்சியை காண 2030ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு ஆர்வத்தோடு கிளம்பி வருகின்றனர்.
30 முதல் 60 செ.மி உயரம் கொண்ட குறிஞ்சி மலர் செடிகள் மலரத் தொடங்கிய பின்னர் இறந்து விடும் என்றும் அதில் இருந்து விழும் விதைகள் மீண்டும் முளைத்து செடியாகி அதில் இருந்து மலர்கள் பூக்க 12 ஆண்டுகள் தேவைப்படுவதாகவும் கூறப்படுகிறது.
 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close