காதலிச்சு திருமணம் பண்ணா சிறுநீர் குடிக்கணும்- விநோத தண்டனை

  ஐஸ்வர்யா   | Last Modified : 01 Aug, 2018 10:22 pm

madhya-pradesh-couple-forced-to-drink-urine-for-marrying-against-parents-wishes

மஹாராஷ்ட்ராவில் பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக காதல் திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடியை சிறுநீர் குடிக்க வைத்த சித்ரவதைப்படுத்திய கொடுமை அரங்கேறியுள்ளது. 

மஹாராஷ்ட்ரா மாநிலம் அலிராக்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தாஸ்பூர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்கிற ஹிதேஸ் (21). இவரும், அதே ஊரை சேர்ந்த நங்கிபாய் (19) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே கடந்த மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் சில தினங்களுக்கு முன் நங்கிபாயின் மாமா வீட்டில் தஞ்சம் அடைந்தனர். இதையறிந்த நங்கிபாயின் பெற்றோர் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து அவர்கள் இருவரையும் இழுத்து சென்றுள்ளனர். வேறு ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அந்த பெண்ணின் முடியை வெட்டியுள்ளனர். ரமேஷை மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். குடும்பத்திற்கு கெட்ட பெயர் வாங்கிக்கொடுத்ததாக இளம் ஜோடிகள் இருவரையும் சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். 

இதையடுத்து காதல் ஜோடி காவல்நிலையத்தில் புகார் அளித்தது. விசாரணை நடத்தியதில் பெண்ணின் தந்தை மற்றும் மாமன் இரண்டு பேரை ஹர்தாஸ்பூர் போலீசார் கைது செய்தனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close