தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங் காலமானார்!

  சுஜாதா   | Last Modified : 02 Aug, 2018 03:15 pm

former-union-minister-bhishma-narain-singh-passes-away

தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சருமான பீஷ்ம நாராயண் சிங் தனது 85வது வயதில் டெல்லியில் உள்ள தனது வீட்டில் காலமானார்.  இவரது உடல் தகனம் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் லோதி சாலையில் உள்ள மயானத்தில் நடைபெற உள்ளது. பீஷ்ம நாராயணன் சிங் மறைவிற்கு தேசிய மற்றும் மாநில அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதன் முதலாக தமிழக முதல்வராக 1991 ம் ஆண்டு பதவி ஏற்ற போது, அவருக்கு அப்போதைய ஆளுநராக இருந்த பீஷ்ம நாராயண் சிங் பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.    

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.