முடிந்தால் என்னை கைது செய்யட்டும்: மேற்கு வங்க அரசுக்கு அமித்ஷா சவால்

  Newstm News Desk   | Last Modified : 02 Aug, 2018 08:57 am

arrest-me-if-you-want-says-amit-shah-over-permission-to-bjp-rally-in-kolkata

மேற்கு வங்க அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் தான் கொல்கத்தா செல்ல இருப்பதாகவும், முடிந்தால் தன்னை கைது செய்யட்டும் என்றும் பா.ஜ.க தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பாஜக சார்பில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்தில் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக உத்தரப்பிரதேசம் சென்றிருந்தார். அது தேர்தல் பிரச்சாரத்துக்காகவே என பல தரப்பினரும் கூறியிருந்தனர்.

இந்நிலையில்  மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்பதற்காக அமித்ஷா கொல்கத்தா செல்லவுள்ளார்.

இந்நிலையில் அமித்ஷா கொல்கத்தா பயணத்திற்கு அம்மாநில காவல்துறையிடமிருந்து அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து தனக்கு அனுமதி வழங்கப்படாவிட்டாலும் ஆகஸ்ட் 11ம் தேதி தான் கொல்கத்தா செல்லவிருப்பதாகவும் முடிந்தால் அவர்கள் தன்னை கைது செய்யட்டும் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

newstm.in

Advertisement:
[X] Close