எல்லையில் இந்திய - சீன படைகள் சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2018 04:29 pm
indian-chinese-army-personnel-meet-at-the-border

ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள இந்திய - சீன எல்லையில் நேற்று இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மக்கள் விடுதலை ராணுவம் என அழைக்கப்படும் சீன ராணுவ தினத்தை நேற்று அந்நாடு கொண்டாடியது. இந்த தினத்தை முன்னிட்டு, சீன ராணுவ அதிகாரிகளும், இந்திய அதிகாரிகளும் நேரில் சந்தித்து, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சூ சுல் மோல்டோ என்ற சீன ராணுவ முகாமில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக இந்திய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கலியா தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு பிரதிநிதிகளும் தேசிய கொடிகளுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் இரு நாட்டு ராணுவ உறவையும் மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பின் சீன கலாச்சார நிகழ்ச்சிகளை அவர்கள் கண்டுகளித்தனர். "ஒரு தரப்பினரும் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நட்பையும், உறவையும் மேம்படுத்துவது குறித்தும், எல்லையில் அமைதியை நிலை நிறுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினர்" என்றும் அவர் கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close