65 அடி ஆழத்தில் விழுந்த கார்...பயணித்தவர்கள் உயிர் தப்பிய அதிசயம்!

  Newstm Desk   | Last Modified : 02 Aug, 2018 05:15 pm

narrow-escape-for-family-members-after-agra-lucknow-expressway-caves-in

கூகுள் மேப்பை பார்த்து ஓட்டியதில் எதிர்பாராதவிதமாக 65 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் கார் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

உத்தரபிரதேசம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் மும்பையில் இருந்து எஸ்யுவி காரில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவருடன் அவரது நண்பர்கள் 4 பேர் சென்றதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. காரை ஓட்டியவர் கூகுள் மேப்பை பார்த்து ஓட்டியுள்ளார். இன்று அதிகாலை ஆக்ரா-லக்னோ அதிவிரைவுச் சாலையில் வசிப்பூர் என்ற கிராமத்துக்கு அருகே வரும் போது அவரது மொபைல் போனில் சார்ஜ் இல்லாத காரணத்தால் போன் ஆஃப் ஆகிவிட்டது. அவர் நேராக காரை ஓட்டியுள்ளார். இதனால் எதிரே இருந்த பள்ளத்தில் கார் விழுந்தது. சுமார் 65 அடி ஆழத்தில் கார் விழுந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர்  கிரேன் கொண்டு கார் மீட்கப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த அனைவரும் சிறு காயங்களுடன் தப்பினர். சமீபத்தில் அங்கு பெய்த கனமழையால் ஆக்ரா-லக்னோ அதிவிரைவுச் சாலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:
[X] Close