நாடாளுமன்றத்தில் ஏற்படும் அமளியால் நாட்டிற்கு பேரிழப்பு- பிரதமர் மோடி

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Aug, 2018 01:58 am

country-loses-the-most-due-to-disruptions-in-parliament-narendra-modi

நாடாளுமன்றத்தில் அடிக்கடி ஏற்படும் அமளியால் நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற அரங்கில் 2014 முதல் 2017  ஆம் ஆண்டு வரை சிறப்பாக பணியாற்றிய எம்.பிக்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, "மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எம்பிக்கள் மக்களின் பிரச்னைக்காக குரல் கொடுக்க வேண்டும்.  ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்காக பேச வேண்டும். அவரவர் தொகுதிக்கான விருப்பத்தினையும், தேவைகளையும் கேட்க வேண்டும். நாடாளுமன்றத்தில் தேவையில்லாத கூச்சல், குழப்பம் நிலவக்கூடாது. இதனால் நாட்டிற்கு பெரிய இழப்பு ஏற்படுகிறது. இதைவிட நாட்டு மக்களுக்கும் பேரிழப்பு. நாடாளுமன்றமானது விவாதத்திற்கான இடம். அங்கு மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைக்க கூடாது” என கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close