அமெரிக்காவை விட மத்திய பிரதேசம் சிறப்பாக உள்ளது- பாஜக முதல்வர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Aug, 2018 01:58 am
madhya-pradesh-roads-no-less-than-us-cm-shivraj-singh-chouhan

மத்திய பிரதேசம் அமெரிக்காவை விட சிறப்பாக உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். 

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், “மத்தியப் பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்ட அரசு காங்கிரஸ்தான். அவர்கள் தரமான சாலைகளையோ, பள்ளிகளையோ உருவாக்கி கொடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நோயாளி மாநிலம் என மத்திய பிரதேசத்தை அழைத்தனர். ஏனென்றால் காங்கிரஸ் ஆட்சியில் மின்சாரம், சாலை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் மத்திய பிரதேசத்தில் உள்ள சாலைகள் அமெரிக்காவை விட சிறப்பாக உள்ளது. மேலும், பாஜக ஆட்சிக்கு வந்தபின், தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு, சாலைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close