நிறைமாத கர்ப்பிணி கூட்டு பாலியல் வன்கொடுமை

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2018 01:56 am
pregnant-woman-gang-raped-in-maharashtra

மஹாராஷ்டிரா மாநிலத்தில், நிறைமாத கர்ப்பிணியை 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் சத்தாரா பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது ஓட்டலை பராமரிக்க ஆள் தேடி வந்துள்ளனர். அப்போது, டஸ்கவோன் பகுதியில், வேலைக்கு ஆள் இருப்பதாக ஒருவர் கூறியதை தொடர்ந்து, இருவரும் 20,000 ரூபாயுடன் சென்றுள்ளனர். அங்கு சென்ற பிறகு, அவர்களை வரவழைத்த நபர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இருவரிடம் இருந்த பணம், நகைகளை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். அதன்பின், கணவரை காரில் கட்டிவைத்து விட்டு, நிறைமாத கர்ப்பிணி என்றுகூட பார்க்காமல், அந்த பெண்ணை 8 பேரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இதுகுறித்து வெளியே சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என அந்த தம்பதியிடம் அவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளனர். அந்த தம்பதி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால்,  அவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்துள்ளதாகவும் கூறியுள்ளனர். 

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில மகளீர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கார், இதுகுறித்து விரைவில் விசாரணை செய்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அந்த பகுதி காவல்துறை எஸ்.பி-க்கு கடிதம் எழுதியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close