உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் கே.எம்.ஜோசப்... இந்திரா பானர்ஜிக்கும் ஒப்புதல்!

  முத்துமாரி   | Last Modified : 03 Aug, 2018 12:07 pm
centre-approves-justice-km-joseph-s-elevation-to-supreme-court

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு கே.எம். ஜோசப் பெயரை கொலீஜியம் பரிந்துரைத்ததை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து அவர் விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார். 

கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு இரண்டு பேரின் பெயர்களை கொலிஜியம் பரிந்துரை செய்தது. அவற்றில் வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ராவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அவர் கடந்த ஏப்ரல் 27ம் தேதி பதவியேற்றுவிட்டார்.

அதே நேரத்தில் உத்தரகாண்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் கே.எம்.ஜோசப் நியமனம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. நீதிபதியாக பதவி வகித்த அனுபவம் இருந்தும் ஜோசப்-க்கு நியமனம் வழங்காதது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கொலீஜியம் குழு மற்றும் மத்திய அரசு இடையே கருத்து முரண்பாடு நிலவி வருகிறது எனவும் பேசப்பட்டது. இதையடுத்து தொடர்ச்சியாக மூன்று முறை உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கே.எம். ஜோசப் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு அவர் மிகவும் தகுதியானவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து கொலீஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரண் ஆகியோருக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கே.எம்.ஜோசப் உள்ளிட்ட மூவரும் விரைவில் உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close