கருணாநிதியை விசாரிக்க சென்னை வருகிறார் தேவகவுடா!

  முத்துமாரி   | Last Modified : 03 Aug, 2018 12:44 pm

ex-prime-minister-devegowda-visits-kauvery-hospital

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க முன்னாள் பிரதமர் தேவகவுடா சென்னை வருகிறார். 

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக, காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வயது முதிர்வின் காரணமாகவும், சிறுநீரகத்தொற்று தொடர்பாகவும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்தாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து அவர் திரும்பி வந்ததாக மருத்துவர்கள் தரப்பு கூறியது. தற்போது கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது எனவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நேரில் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்து செல்கின்றனர். அவர்களை தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேவகவுடா சென்னை வரவிருக்கிறார். நாளை சென்னை வரும் தேவகவுடா மாலை 5 மணி அளவில் காவேரி மருத்துவமனைக்கு செல்ல இருக்கிறார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.