உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சைக்கிளில் எடுத்து சென்ற அவலம்!

  Newstm Desk   | Last Modified : 03 Aug, 2018 05:49 pm

odisha-man-carries-sister-in-law-s-body-on-bicycle

உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சைக்கிளில் எடுத்து சென்ற அவலம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. 

ஒடிசாவின் கிருஷ்ணப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சதுர்புஜா பங்கா. இவர் மனைவி மற்றும் மனைவியின் சகோதரியுடன் வசித்து வந்தார். சாதி மாறி திருமணம் செய்ததாக கூறி இவர்களை கிராமத்தினர் ஊரை விட்டு தள்ளிவைத்திருந்தனர். 

இந்த நிலையில் மனைவி மற்றும் அவரது சகோதரிக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனைவியின் சகோதரி உயிரிழந்தார். அவரது சடலத்தை  எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் உதவி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது சடலத்தை அந்த நபர் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார். மேலும் அவரது இறுதிச்சடங்கிலும் உதவ யாரும் முன்வரவில்லை. இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் யாரும் வரவில்லை. இதனால், தன்னுடைய சைக்கிளில் உடலைக் கட்டி எடுத்துச் சென்று, இறுதிச் சடங்கை முடித்திருக்கிறார் சதுர்புஜா.

வளர்ந்து வரும் நவீன உலகில் இன்னும் நாட்டில் சரிசெய்யப்பட வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது. சாதிக்கொடுமைகளுக்கு எதிராக பல்வேறு தலைவர்கள் போராடினாலும் முற்றுப்புள்ளி இல்லாமல் போய்க்கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். 

சைக்கிளில் உடலை கொண்டு சென்ற படம் தற்போது வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து ஒடிசா அரசுக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியும் வரத் தொடங்கியுள்ளது. சதுர்புஜா பங்காவின் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்கு செஞ்சிலுவை சங்கம் ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளது. இந்த பிரச்னையை மாநில பா.ஜ.க-வும் கிளப்பி வருகிறது.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.