ஆந்திரா கல்குவாரியில் வெடி விபத்து; உடல் சிதறி 11 பேர் பலி

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2018 11:30 am

10-killed-in-blast-at-stone-quarry-in-andhra-pradesh-s-kurnool

ஆந்திராவில் உள்ள கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உடல்சிதறி பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஹதி பெல்கல் என்ற இடத்தில் கல்குவாரியில் நேற்று இரவு திடீரென பயங்கரமாக வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. வெடித்ததும் அப்பகுதி முழுவதும் தீ பரவியது. அந்த நேரத்தில் அங்கு சுமார் 20 பேர் பணியில் ஈடுபட்டிருந்ததாக செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே 10 பேர் உடல்சிதறி பலியாகியுள்ளனர். மேலும் காயமடைந்த நிலையில் 15 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இன்று காலை பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. 

இவர்கள் அனைவரும் ஒடிசா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வேலைக்காக ஆந்திரா வந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றதாக தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சிறப்பாக சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளார். தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார். 

அதேபோல் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஜனசேனா கட்சித்தலைவர்  பவன் கல்யாண் ஆகியோரும் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.