பா.ஜ.க அரசை கண்டித்து மேற்கு வங்கத்தில் இன்றும் நாளையும் கருப்பு தினம்!

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2018 12:05 pm
trinamool-congress-to-observe-black-day-in-bengal-today-tomorrow

அசாம் விமான நிலையத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து, அக்கட்சியினர் இன்றும் நாளையும் மேற்குவங்கத்தில் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர். 

அசாம் மாநில குடிமக்கள் பதிவேடு விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கள நிலவரத்தை ஆய்வு செய்ய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் 6 பேர் சென்றுள்ளனர். ஆனால் அவர்களை குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல விடாமல்போலீசார் தடுத்துள்ளனர். இதற்கு மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து இதுகுறித்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், "அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி வரைவு பட்டியல் கடந்த 30ம் தேதி வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அம்மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் கள நிலவரத்தை பார்வையிடச் சென்ற நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் சில்சார் விமான நிலையத்திலேயே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். போலீசாரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க அரசு கூறியதன் பேரிலே போலீசார் இவ்வாறு செயல்பட்டுள்ளார். அரசு பிரதிநிதிகள் நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அவர்களுக்கு அந்த உரிமை உள்ளது. இதனை கண்டித்து இன்று(ஆகஸ்ட் 4) மற்றும் (ஆகஸ்ட் 5) ஆகிய இரு தினங்களும் மேற்குவ வங்க மாநிலம் முழுவதும் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது" என தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close