காஷ்மீர் முன்னாள் முதல்வர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் சுட்டுக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2018 12:05 pm
man-gunned-down-after-trying-to-enter-farooq-abdullah-s-residence-in-jammu

காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றவர் காவல் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா வீட்டிற்குள் இன்று காரில் வந்த மர்ம நபர் ஒருவர் நுழைய முற்பட்டுள்ளார். அந்த நேரத்தில் காவல் அதிகாரிகள் தடுத்தும் அவர் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலே மரணமடைந்தார். உள்நுழைந்த நபர் யார் என்ற விபரங்கள் இதுவரை தெரியவில்லை.காவல்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close