பெண்களிடமிருந்து ஆண்களை பாதுகாக்க ‘புருஷ் ஆயோக்’

  ஐஸ்வர்யா   | Last Modified : 04 Aug, 2018 06:46 pm

bjp-lawmaker-asks-for-purush-aayog

மகளிருக்கு செயல்படும் மகளிர் ஆணையம் போல ஆண்டுகளுக்கு தனி ஆணையம் வேண்டும் என பாஜக எம்பி ஹரிநாரயண் ராஜ்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்திர பிரதேச மாநிலம் கோஸி மக்களவை தொகுதி பாஜக எம்.பி ஹரிநாராயண் மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின்போது, “மகளிர் ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது போல ஆண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கும், கொடுமைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் ஆண்களுக்கு என்று அமைப்பு வேண்டும். கணவன்கள் மனைவிகளின் தொல்லைக்கு ஆளாகின்றனர். மகளிர் ஆணையத்தை போன்று ஆண்களுக்கு புருஷ் ஆயோக் என்பது தேவை” என கூறினார்.

அவர் பேசியபின் அவையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close