டெல்லியில் பினராயி விஜயன் தங்கியிருந்த இடத்தில் கத்தியுடன் சென்ற நபரால் பரபரப்பு!

  Newstm Desk   | Last Modified : 04 Aug, 2018 07:26 pm
knife-wielding-man-charges-to-kerala-cm-vijayan-s-room-arrested

டெல்லியில் இன்று பினராயி விஜயன் தங்கியிருந்த இல்லத்தில் கத்தியுடன் புகுந்த நபரை பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று டெல்லி சென்றார். டெல்லி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த அவர், கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அங்கிருந்து புறப்பட்டார். 

அந்த சமயத்தில் அங்கு வந்த நபர் கையில் கத்தியுடன் கேரள முதல்வரை நோக்கி சென்றுள்ளார். சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நபரை பிடித்தனர். அந்த நபர், "நான் முதல்வரை பார்க்க வேண்டும். அவர் எனது பிரச்னைகளை தீர்க்கவில்லை. அவரை சந்திக்க அனுமதிக்காவிட்டால் தற்கொலை செய்வேன்" என்று தெரிவித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். 

விசாரித்ததில் அவர் பெயர் விமல்ராஜ், கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் உள்ளே நுழைந்தது எப்படி என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close