ராட்டை சுற்றுவது போல விளம்பரம்: நடிகர் மோகன்லாலுக்கு நோட்டீஸ்

  Newstm News Desk   | Last Modified : 05 Aug, 2018 08:38 am

kerala-khadi-board-issues-legal-notice-to-actor-mohanlal

ஜவுளி கடை விளம்பரத்தில் ராட்டை சுற்றுவது போல நடித்த நடிகர் மோகன்லாலுக்கு கேரள காதி வாரிம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மலையாள நடிகர் மோகன்லால் ஏராளமான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவர் பிரபல ஜவுளி நிறுவனத்தின் விளம்பரத்தில் ராட்டையில் நூல் சுற்றுவதுபோல் நடித்திருந்தார். இந்நிலையில் இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக கேரள காதி வாரியம் சார்பில் மோகன்லாலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கேரள காதி வாரிய துணை தலைவர் ஷோபனா ஜார்ஜ் கூறுகையில், ‘‘ராட்டை மூலம் காதி துணிகள் மட்டுமே தயாரிக்கப்படுறது. இது தேசியத்தின் அடையாளச் சின்னம். ஆனால் மோகன்லால் காதிக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லாத ஒரு விளம்பர படத்தில் ராட்டையுடன் தோன்றியுள்ளார். இதன் மூலம் மக்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்கி உள்ளார்.

மேலும், இதனால் காதி என்ற பெயரில் போலி துணிகள் சந்தையில் விற்பனைக்கு வரவும் வாய்ப்புள்ளது. எனவே இந்த விளம்பரத்தில் தோன்றிய மோகன்லாலுக்கும் ஜவுளி நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close