பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ. 2 லட்சம்: கேரளா அரசு அறிவிப்பு

  Newstm News Desk   | Last Modified : 05 Aug, 2018 11:01 am

kerala-government-announces-rs-2-lakh-for-sex-change-surgeries

திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. 

நாடு முழுவதும் திருநங்கைகளின் வாழ்க்கை மேம்படுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில், திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ரூ. 2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நீதியின் அடிப்படையில், திருநங்கைகளுக்கான இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா அரசு திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கேரளாவில் பல்கலைக்கழக கல்லூரிகள் உள்பட அதன் உறுப்பு கல்லூர்கள் என்று அனைத்து பிரிவுகளிலும், திருநங்கைகளுக்காக இட ஒதுக்கீடு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close