பிச்சைக்காரரின் சடலத்தை சுமந்த பாஜக எம்.எல்.ஏ

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Aug, 2018 09:04 pm

odisha-mla-performs-last-rites-of-destitute-woman

பிச்சை எடுப்பவரின் சடலத்தை பாஜக எம்.எல்.ஏ தன் கையால் தூக்கி சென்று இறுதிச் சடங்குகளை செய்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் ஜர்சுகுதா மாவட்டத்தில் ரெங்காலி அருகே அமனபள்ளியில் பிச்சை எடுத்து பிழைத்துவந்த மூதாட்டி ஒருவர் நோய்வாய் பட்டு இறந்துவிட்டார். அந்த மூதாட்டி எந்த சாதி என தெரியாது ஆதலால் அவரை தொட்டு இறுதி ஊர்வலம் செய்தால் ஊரைவிட்டு ஒதுக்கிவிடுவார்கள் எனக்கூறி கிராமமக்கள் யாரும் மூதாட்டியின் சடலத்தை எடுக்க முன்வரவில்லை. இதுகுறித்து தகவலறிந்த  அந்த தொகுதி எம்.எல்.ஏ ரமேஷ், தனது மகன்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை எடுத்து சென்று இறுதி சடங்குகளை செய்தார். எம்.எல் ஏ. ரமேஷ் இன்றும் அத்தொகுதில் ஏழை எம்.எல்.ஏவாகவே இருக்கிறார். அவருக்கென ஒரு செண்ட் நிலன்கூட கிடையாது. இன்றும் வாடகை வீட்டில் தான் வசித்துவருகிறார் என்பது குறிப்பிடதக்கது. 

இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், “அமனபள்ளி கிராமத்தில் மற்றொரு சாதியை சேர்ந்தவரின் உடலை மற்ற சாதியினர் தொட மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் தான் என் மகன்களுடன் வந்து அனைத்து மரியாதைகளையும் மூதாட்டி வழங்கினேன்” என கூறினார்.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close