காஷ்மீர்: ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு; பொதுமக்களில் ஒருவர் பலி

  Newstm Desk   | Last Modified : 07 Aug, 2018 12:56 pm
kashmir-civilian-killed-in-security-forces-firing

ஜம்மு காஷ்மீரின் ரம்பா என்ற பகுதியில், பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் ஒருவர் காயமடைந்தார்.

நேற்று இரவு, சும்பன் கோலி என்ற இடத்தில் நடந்து வரும் சுரங்கப்பாதை திட்டத்தின் அருகே பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். அப்போது அந்த இடத்தில் சந்தேகத்திற்குரிய முறையில் ஆள் நடமாட்டம் இருந்ததாக தெரிகிறது. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அங்கிருந்து யாரும் வெளியே வராத காரணத்தால், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் ஒருவர் காயமடைந்தார். 

"பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும், அவர்களிடம் இருந்து எந்த அறிகுறியும் இல்லாததால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொல்லப்பட்ட ஒருவர் தவிர மற்றொருவர் காயமடைந்தார்" என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close