எனது அரசு பங்களாவை சேதபடுத்தியர்வர்களை அடையாளம் காட்டினால் ரூ.11 லட்சம்- அகிலேஷ் யாதவ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Aug, 2018 09:21 pm
akhilesh-yadav-announces-rs-11-lakh-reward-for-naming-culprits-who-vandalised-his-bungalow

எனது அரசு பங்களாவை யார் சேதப்படுத்தினார் என்பது குறித்த விவரங்கள் மற்றும் நபர்களை அடையாளம் காட்டினால் ரூ. 11 லட்சம் பரிசாக வழங்கப்படும் என உத்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து உத்திர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தான் குடியிருந்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டு வெளியேறினார். ஆனால் அவர் அரசு பங்களாவை சேதப்படுத்திவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் லக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அகிலேஷ் யாதவ், “நான் அரசு பங்களாவை சேதப்படுத்தவில்லை. நான் காலி செய்திவிட்டு வந்த அன்று இரவு என் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் சிலர் சென்றனர். அவர்கள்தான் இதுபோன்று சேதங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும். பங்களாவை சேதப்படுத்தியவர்களை அடையாளம் காட்டினால் அவர்களுக்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் ரூ .11 லட்சம் வழங்கப்படும்” என தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close